| 137 | நினைந்து உருகும் அடியாரை நைய வைத்தார்;            நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்;   சினம் திருகு களிற்று உரிவைப் போர்வை வைத்தார்;     செழு மதியின்தளிர் வைத்தார்; சிறந்து வானோர்-   இனம் துருவி, மணி மகுடத்து ஏற, துற்ற இன       மலர்கள் போது அவிழ்ந்து மது வாய்ப் பில்கி   நனைந்தனைய திருவடி என் தலைமேல்     வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!. |