589பொங்கு ஆடு அரவு ஒன்று கையில் கொண்டு, போர்
                  வெண்மழு ஏந்தி, போகா நிற்பர்;
தங்கார் ஒரு இடத்தும், தம்மேல் ஆர்வம் தவிர்த்து
         அருளார்; “தத்துவத்தே நின்றேன்” என்பர்;
எங்கே இவர் செய்கை? ஒன்று ஒன்று ஒவ்வா; என்
           கண்ணில் நின்று அகலா வேடம் காட்டி,
மங்குல் மதி தவழும் மாட வீதி வலம்புரமே
                     புக்கு, அங்கே மன்னினாரே.