131செத்தவர் தம் தலைமாலை கையில் ஏந்தி,
                  சிரமாலை சூடி, சிவந்த மேனி
மத்தகத்த யானை உரிவை மூடி, மடவாள்
               அவளோடும் மான் ஒன்று ஏந்தி,
அத் தவத்த தேவர் அறுபதின்மர்
            ஆறுநூறாயிரவர்க்கு ஆடல் காட்டி,
புத்தகம் கைக் கொண்டு, புலித்தோல் வீக்கி,
       “புறம்பயம் நம் ஊர்” என்று போயினாரே!