| 142 | உற்று உலவு பிணி உலகத்து எழுமை வைத்தார்;     உயிர் வைத்தார்; உயிர் செல்லும் கதிகள் வைத்தார்;   மற்று அமரர்கணம் வைத்தார்; அமரர் காணாமறை             வைத்தார்; குறைமதியம் வளர வைத்தார்;   செற்றம் மலி ஆர்வமொடு காமலோபம் சிறவாத                   நெறி வைத்தார்; துறவி வைத்தார்;   நல்-தவர் சேர் திருவடி என் தலைமேல்      வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!. |