| 217 | மால்யானை மத்தகத்தைக் கீண்டார் போலும்;           மான்தோல் உடையா மகிழ்ந்தார் போலும்;   கோலானைக் கோ அழலால் காய்ந்தார் போலும்;         குழவிப்பிறை சடைமேல் வைத்தார் போலும்;   காலனைக் காலால் கடந்தார் போலும்; கயிலாயம்                 தம் இடமாக் கொண்டார் போலும்;   ஆல், ஆன் ஐந்து ஆடல், உகப்பார்      போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே. |