239 | அம்மை பயக்கும் அமிர்து கண்டாய்; அம் தேன் தெளிகண்டாய்; ஆக்கம் செய்திட்டு இம்மை பயக்கும் இறைவன் கண்டாய்; என் நெஞ்சே! உன்னில் இனியான் கண்டாய்; மெய்ம்மையே ஞான விளக்குக் கண்டாய்; வெண் காடன் கண்டாய்; வினைகள் போக மம்மர் அறுக்கும் மருந்து கண்டாய்-மறைக்காட்டு உறையும் மணாளன் தானே. |