| 254 | தேரூரார்; மாவூரார்; திங்களூரார்; திகழ்                     புன்சடைமுடிமேல்-திங்கள்சூடி;   கார் ஊராநின்ற கழனிச் சாயல் கண் ஆர்ந்த                     நெடுமாடம் கலந்து தோன்றும்   ஓர் ஊரா உலகுஎலாம் ஒப்பக் கூடி, “உமையாள்                       மணவாளா!” என்று வாழ்த்தி,   “ஆரூரா! ஆரூரா!” என்கின்றார்கள்;         அமரர்கள்தம் பெருமானே! எங்கு உற்றாயே?. |