| 266 | மெய்ப் பால் வெண்நீறு அணிந்த மேனியானை,        வெண் பளிங்கின் உடல் பதித்த சோதியானை,   ஒப்பானை, ஒப்பு இலா ஒருவன் தன்னை,           உத்தமனை, நித்திலத்தை, உலகம் எல்லாம்   வைப்பானை, களைவானை, வருவிப்பானை,      வல்வினையேன் மனத்து அகத்தே மன்னினானை,   அப்பாலைக்கு அப்பாலைக்கு அப்பாலானை,-         ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே!. |