277மூள்வு ஆய தொழில் பஞ்சேந்திரிய வஞ்ச-
                 முகரிகாள்! முழுதும் இவ் உலகை ஓடி
நாள்வாயும் நும்முடைய மம்மர் ஆணை
     நடாத்துகின்றீர்க்கு அமையாதே? யானேல், வானோர்
நீள் வானமுகடு அதனைத் தாங்கி நின்ற 
               நெடுந்தூணை, பாதாளக் கருவை, ஆரூர்
ஆள்வானை, கடுகச் சென்று அடைவேன்; நும்மால்
    ஆட்டுணேன்; ஓட்டந்து ஈங்கு அலையேன்மி(ன்)னே!.