308 | விண்டவர் தம் புரம் மூன்றும் எரி செய்தான்காண்; வேலை விடம் உண்டு இருண்ட கண்டத்தான்காண்; மண்டலத்தில் ஒளி வளர விளங்கினான்காண்; வாய் மூரும் மறைக்காடும், மருவினான் காண்; புண்டரிகக் கண்ணானும், பூவின்மேலைப் புத்தேளும், காண்பு அரிய புராணன் தான்காண்- தெண் திரை நீர் வயல் புடை சூழ் திரு ஆரூரில்-திரு மூலட்டானத்து எம் செல்வன் தானே. |