322 | மலையான் மடந்தை மணாளா, போற்றி! மழவிடையாய்! நின் பாதம் போற்றி போற்றி! நிலை ஆக என் நெஞ்சில் நின்றாய், போற்றி! நெற்றிமேல் ஒற்றைக் கண் உடையாய், போற்றி! இலை ஆர்ந்த மூ இலை வேல் ஏந்தீ, போற்றி! ஏழ்கடலும் ஏழ் பொழிலும் ஆனாய், போற்றி! சிலையால் அன்று எயில் எரித்த சிவனே, போற்றி! திருமூலட்டானனே, போற்றி போற்றி!. |