Try error :java.sql.SQLException: Closed Resultset: next
323பொன் இயலும் மேனியனே, போற்றி போற்றி!
            பூதப்படை உடையாய், போற்றி போற்றி!
மன்னிய சீர் மறை நான்கும் ஆனாய்,
     போற்றி! மறி ஏந்து கையானே, போற்றி போற்றி!
உன்னுமவர்க்கு உண்மையனே, போற்றி
      போற்றி! உலகுக்கு ஒருவனே, போற்றி போற்றி!
சென்னி மிசை வெண் பிறையாய், போற்றி
       போற்றி! திருமூலட்டானனே, போற்றி போற்றி!.