6.45 திருஒற்றியூர்
திருத்தாண்டகம்
448வண்டு ஓங்கு செங்கமலம் கழுநீர் மல்கும் மதமத்தம்
                      சேர் சடை மேல் மதியம் சூடி,
திண் தோள்கள் ஆயிரமும் வீசி நின்று, திசை சேர
                      நடம் ஆடி, சிவலோக(ன்)னார்
உண்டார் நஞ்சு, உலகுக்கு ஓர் உறுதி வேண்டி;
                 ஒற்றியூர் மேய ஒளி வண்ண(ன்)னார்;
கண்டேன், நான் கனவு அகத்தில்; கண்டேற்கு என்
  தன் கடும் பிணியும் சுடும் தொழிலும் கைவிட்ட(வ்)வே.