Try error :java.sql.SQLException: Closed Resultset: next
6.47 திருஆவடுதுறை
திருத்தாண்டகம்
469திருவே, என் செல்வமே, தேனே, வானோர் செழுஞ்சுடரே,
                        செழுஞ்சுடர் நல் சோதி மிக்க
உருவே, என் உறவே, என் ஊனே, ஊனின் உள்ளமே,
                           உள்ளத்தின் உள்ளே நின்ற
கருவே, என் கற்பகமே, கண்ணே, கண்ணின் கருமணியே,
                         மணி ஆடு பாவாய், காவாய்,
அருஆய வல்வினைநோய் அடையா வண்ணம்!
               ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.