6.56 திருக்கயிலாயம்
போற்றித் திருத்தாண்டகம்
562பொறை உடைய பூமி, நீர், ஆனாய்! போற்றி!
               பூதப்படை ஆள் புனிதா, போற்றி!
நிறை உடைய நெஞ்சின் இடையாய், போற்றி!
      நீங்காது என் உள்ளத்து இருந்தாய், போற்றி!
மறை உடைய வேதம் விரித்தாய், போற்றி!
            வானோர் வணங்கப்படுவாய், போற்றி!
கறை உடைய கண்டம் உடையாய், போற்றி!
           கயிலை மலையானே, போற்றி போற்றி!.