564 | மாலை எழுந்த மதியே, போற்றி! மன்னி என் சிந்தை இருந்தாய், போற்றி! மேலை வினைகள் அறுப்பாய், போற்றி! மேல் ஆடு திங்கள் முடியாய், போற்றி! ஆலைக் கரும்பின் தெளிவே, போற்றி! அடியார்கட்கு ஆர் அமுதம் ஆனாய், போற்றி! காலை முளைத்த கதிரே, போற்றி! கயிலை மலையானே, போற்றி போற்றி!. |