Try error :java.sql.SQLException: Closed Resultset: next
592நெருப்பு அனைய மேனிமேல் வெண் நீற்றாரும்,
          நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைவித்தாரும்,
பொருப்பு அரையன் மடப்பாவை இடப்பாலரும்,
               பூந்துருத்தி நகர் மேய புராணனாரும்,
மருப்பு அனைய வெண் மதியக் கண்ணியாரும்,
         வளை குளமும் மறைக்காடும் மன்னினாரும்,
விருப்பு உடைய அடியவர் தம் உள்ளத்தாரும்
       வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.