| 643 | தாய் அவன் காண், உலகிற்கு; தன் ஒப்பு இல்லாத்      தத்துவன் காண்; “மலை மங்கை பங்கா!” என்பார்   வாயவன் காண்; வரும் பிறவி நோய் தீர்ப்பான் காண்,       வானவர்க்கும் தானவர்க்கும் மண்ணுளோர்க்கும்;   சேயவன் காண், நினையார்க்கு; சித்தம் ஆரத்        திருவடியே உள்கி நினைந்து எழுவார் உள்ளம்   ஏயவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி         ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே. |