Try error :java.sql.SQLException: Closed Resultset: next
667மறையானை, மால் விடை ஒன்று ஊர்தியானை,
    மால்கடல் நஞ்சு உண்டானை, வானோர் தங்கள்-
இறையானை, என் பிறவித்துயர் தீர்ப்பானை,
            இன்னமுதை, மன்னிய சீர் ஏகம்பத்தில்
உறைவானை, ஒருவரும் ஈங்கு அறியா வண்ணம்
             என் உள்ளத்துள்ளே ஒளித்து வைத்த
சிறையானை, திரு நாகேச்சுரத்து உளானை,
             சேராதார் நன்நெறிக்கண் சேராதாரே.