758ஏடு ஏறு மலர்க்கமலத்து அயனும், மாலும்,
     இந்திரனும், பணிந்து ஏத்த இருக்கின்றான் காண்;
தோடு ஏறும் மலர்க்கடுக்கை, வன்னி, மத்தம்,
    துன்னிய செஞ்சடையான் காண்; துகள் தீர் சங்கம்
மாடு ஏறி முத்து ஈனும் கானல் வேலி மறைக்காட்டு
                - மாமணி காண் வளம் கொள் மேதி
சேடு ஏறி மடுப் படியும் திருப் புத்தூரில்-திருத்
           தளியான் காண்; அவன் என் சிந்தையானே.