Try error :java.sql.SQLException: Closed Resultset: next
800மருவு இனிய மறைப் பொருளை, மறைக்காட்டானை,
        மறப்பு இலியை, மதி ஏந்து சடையான் தன்னை,
உரு நிலவும் ஒண்சுடரை, உம்பரானை, உரைப்பு
                 இனிய தவத்தானை, உலகின் வித்தை,
கரு நிலவு கண்டனை, காளத்தி(ய்)யை, கருதுவார்
                         மனத்தானை, கல்விதன்னை,
செரு நிலவு படையானை, திரு மாற்பேற்று எம்
    செம்பவளக்குன்றினை, சென்று அடைந்தேன், நானே.