834துங்க நகத்தால் அன்றித் தொலையா வென்றித்
       தொகு திறல் அவ் இரணியனை ஆகம் கீண்ட
அம் கனகத்திருமாலும், அயனும், தேடும் ஆர்
      அழலை; அநங்கன் உடல் பொடி ஆய் வீழ்ந்து
மங்க, நகத் தான் வல்ல மருந்து தன்னை; வண்
                கயிலை மாமலைமேல் மன்னி நின்ற,
செங்கனகத்திரள் தோள், எம் செல்வன் தன்னை;
        செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.