863 | வம்பின் மலர்க்குழல் உமையாள் மணவாளன் காண்; மலரவன், மால், காண்பு அரிய மைந்தன் தான் காண்; கம்ப மதக்கரி பிளிற உரி செய்தோன் காண்; கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டத்தோன் காண்; அம்பர் நகர்ப் பெருங்கோயில் அமர்கின்றான் காண்; அயவந்தி உள்ளான் காண்; ஐயாறன் காண்; செம்பொன் எனத் திகழ்கின்ற உருவத்தான் காண்; சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன் தானே. |