885 | மட்டு மலியும் சடையார் போலும்; மாதை ஓர் பாகம் உடையார் போலும்; கட்டம் பிணிகள் தவிர்ப்பார் போலும்; காலன் தன் வாழ்நாள் கழிப்பார் போலும்; நட்டம் பயின்று ஆடும் நம்பர் போலும்; ஞாலம், எரி, நீர், வெளி, கால், ஆனார் போலும்; எட்டுத் திசைகளும் தாமே போலும் இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாரே. |