904 | “நீள் நிலமும், அம் தீயும், நீரும், மற்றை நெறி இலங்கும் மிகு காலும், ஆகாச(ம்)மும், வாள் நிலவு தாரகையும், மண்ணும், விண்ணும், மன் உயிரும், என் உயிரும், தான் ஆம் செம்பொன் ஆணி!” என்றும், “அஞ்சன மாமலையே!” என்றும், “அம் பவளத்திரள்!” என்றும், அறிந்தோர் ஏத்தும் சேண் எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தை; செழுஞ்சுடரை; சென்று அடையப் பெற்றேன், நானே. |