129ஆகாத நஞ்சு உண்ட அந்தி வண்ணர், ஐந்தலைய
      மாசுணம் கொண்டு, அம் பொன் தோள்மேல்
ஏகாசமா இட்டு, ஓடு ஒன்று ஏந்தி வந்து(வ்),
   “இடு, திருவே, பலி!” என்றார்க்கு, இல்லே புக்கேன்;
பாகு ஏதும் கொள்ளார்; பலியும் கொள்ளார்;
          பாவியேன் கண்ணுள்ளே பற்றி நோக்கி,
போகாத வேடத்தர் பூதம் சூழ, “புறம்பயம் நம்
                     ஊர்” என்று போயினாரே!