230 | மனை துறந்த வல் அமணர் தங்கள் பொய்யும், மாண்பு உரைக்கும் மனக் குண்டர் தங்கள் பொய்யும், சினை பொதிந்த சீவரத்தர் தங்கள் பொய்யும், மெய் என்று கருதாதே, போத, -நெஞ்சே!- பனைஉரியைத் தன் உடலில் போர்த்த எந்தை-அவன் பற்றே பற்று ஆகக் காணின் அல்லால், கனைகடலின் தெண்கழி சூழ் அம் தண் நாகைக்காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே?. |