30நிறை ஆர்ந்த நீர்மை ஆய் நின்றான்தன்னை,
        நெற்றிமேல் கண் ஒன்று உடையான் தன்னை,
மறையானை, மாசு ஒன்று இலாதான் தன்னை,
    வானவர்மேல் மலர் அடியை வைத்தான் தன்னை,
கறையானை, காது ஆர் குழையான் தன்னை,
              கட்டங்கம் ஏந்திய கையான் தன்னை,
இறையானை, எந்தைபெருமான் தன்னை;- ஏழையேன்
                    நான் பண்டு இகழ்ந்த ஆறே!.