544 | இருள் ஆய உள்ளத்தின் இருளை நீக்கி, இடர்பாவம் கெடுத்து, ஏழையேனை உய்யத் தெருளாத சிந்தைதனைத் தெருட்டி, தன் போல் சிவலோக நெறி அறியச் சிந்தை தந்த அருளானை; ஆதி மா தவத்து உளானை; ஆறு அங்கம் நால் வேதத்து அப்பால் நின்ற பொருளானை; புள்ளிருக்கு வேளூரானை; போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!. |