519 | புன்கூரார்; புறம்பயத்தார்; புத்தூர் உள்ளார்; பூவணத்தார்; புலிவலத்தார்; வலியின் மிக்க தன் கூர்மை கருதி வரை எடுக்கல் உற்றான் தலைகளொடு மலைகள் அன தாளும் தோளும் பொன் கூரும் கழல் அடி ஓர் விரலால் ஊன்றி, பொருப்பு அதன் கீழ் நெரித்து, அருள்செய் புவன நாதர்; மின் கூரும் சடைமுடியார்; விடையின் பாகர் வீழிமிழலையே மேவினாரே. |