53முக்கணா, போற்றி! முதல்வா, போற்றி!
         முருகவேள்தன்னைப் பயந்தாய், போற்றி!
தக்கணா, போற்றி! தருமா, போற்றி! தத்துவனே,
                 போற்றி! என் தாதாய் போற்றி!
தொக்கு “அணா” என்று இருவர் தோள் கைகூப்ப,
      துளங்காது எரிசுடர் ஆய் நின்றாய், போற்றி!
எக்கண்ணும் கண் இலேன்; எந்தாய், போற்றி!-எறி
               செடில வீரட்டத்து ஈசா, போற்றி!.