632முற்றாத வெண்திங்கள் கண்ணியானை, முந்நீர் நஞ்சு
             உண்டு இமையோர்க்கு அமுதம் நல்கும்
உற்றானை, பல் உயிர்க்கும் துணை ஆனானை,
         ஓங்காரத்து உள்பொருளை, உலகம் எல்லாம்
பெற்றானை, பின் இறக்கம் செய்வான் தன்னை,
       “பிரான்” என்று போற்றாதார் புரங்கள் மூன்றும்
செற்றானை, திரு ஆனைக்கா உளானை,
             செழுநீர்த்திரளை, சென்று ஆடினேனே.