688 | துறவாதே யாக்கை துறந்தான் தன்னை, சோதி முழு முதல் ஆய் நின்றான் தன்னை, பிறவாதே எவ் உயிர்க்கும் தானே ஆகிப் பெண்ணினோடு ஆண் உரு ஆய் நின்றான் தன்னை, மறவாதே தன் திறமே வாழ்த்தும் தொண்டர் மனத்து அகத்தே அனவரதம் மன்னி நின்ற திறலானை, திரு முதுகுன்று உடையான் தன்னை, தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!. |