6.76 திருப்புத்தூர்
திருத்தாண்டகம்
755புரிந்து அமரர் தொழுது ஏத்தும் புகழ் தக்கோன்
   காண், போர் விடையின் பாகன் காண், புவனம் ஏழும்
விரிந்து பல உயிர் ஆகி விளங்கினான் காண், விரைக்
        கொன்றைக் கண்ணியன் காண், வேதம் நான்கும்
தெரிந்து முதல் படைத்தோனைச் சிரம் கொண்டோன்
   காண், தீர்த்தன் காண், திருமால் ஓர் பங்கத்தான் காண்
திருந்து வயல் புடை தழுவு திருப் புத்தூரில்-திருத்
             தளியான் காண்; அவன் என் சிந்தையானே.