794 | கைத்தலங்கள் இருபது உடை அரக்கர் கோமான் கயிலை மலை அது தன்னைக் கருதாது ஓடி, முத்து இலங்கு முடி துளங்க வளைகள் எற்றி முடுகுதலும், திருவிரல் ஒன்று அவன் மேல் வைப்ப, பத்து இலங்கு வாயாலும் பாடல் கேட்டு, பரிந்து, அவனுக்கு “இராவணன்” என்று ஈந்த நாமத் தத்துவனை; தலையாலங்காடன் தன்னை; சாராதே சால நாள் போக்கினேனே!. |