864 | பித்தன் காண்; தக்கன் தன் வேள்வி எல்லாம் பீடு அழியச் சாடி, அருள்கள் செய்த முத்தன் காண்; முத்தீயும் ஆயினான் காண்; முனிவர்க்கும் வானவர்க்கும் முதல் ஆய் மிக்க அத்தன் காண்; புத்தூரில் அமர்ந்தான் தான் காண்; அரிசில் பெருந்துறையே ஆட்சி கொண்ட சித்தன் காண்; சித்தீச்சுரத்தான் தான் காண்; சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன் தானே. |