769கான் மறையும் போதகத்தின் உரிவை கண்டேன்;
    காலில் கழல் கண்டேன்; கரியின் தோல் கொண்டு
ஊன் மறையப் போர்த்த வடிவும் கண்டேன்;
           உள்க மனம்வைத்த உணர்வும் கண்டேன்;
நால் மறையானோடு நெடிய மாலும் நண்ணி
                   வரக் கண்டேன்; திண்ணம் ஆக
மான்மறி தம் கையில் மருவக் கண்டேன்-
            வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!.