93 | கை ஓர் கபாலத்தர்;மானின் தோலர்;கருத்து உடையர்;நிருத்தராய்க் காண்பார் முன்னே; செய்ய திரு மேனி வெண் நீறு ஆடி, திகழ் புன்சடை முடிமேல்-திங்கள் சூடி, மெய் ஒருபாகத்து உமையை வைத்து, மேவார் திரிபுரங்கள் வேவச் செய்து(வ்), ஐயனார் போகின்றார்;வந்து காணீர்-அழகியரே, ஆமாத்தூர் ஐயனாரே!. |