Try error :java.sql.SQLException: Closed Resultset: next
3கருமானின் உரி-அதளே உடையா வீக்கி, கனை
        கழல்கள் கலந்து ஒலிப்ப, அனல் கை ஏந்தி,
வரு மானத் திரள் தோள்கள் மட்டித்து ஆட,
 வளர்மதியம் சடைக்கு அணிந்து, மான் நேர் நோக்கி
அரு மான வாள் முகத்தாள் அமர்ந்து காண,
            அமரர்கணம் முடி வணங்க, ஆடுகின்ற
பெருமானை, பெரும்பற்றப்புலியூரானை, -பேசாத நாள்
                          எல்லாம் பிறவா நாளே.