155துடி ஆம்; துடியின் முழக்கம் தான் ஆம்;
    சொல்லுவார் சொல் எல்லாம் சோதிப்பான் ஆம்;
படிதான் ஆம்; பாவம் அறுப்பான் ஆகும்; பால்
              நீற்றன் ஆம்; பரஞ்சோதிதான் ஆம்;
கொடியான் ஆம் கூற்றை உதைத்தான் ஆகும்;
               கூறாத வஞ்சக் குயலர்க்கு என்றும்
கடியான் ஆம்; காட்சிக்கு அரியான் ஆகும்;
             கண் ஆம்-கருகாவூர் எந்தைத்தானே.