| 193 | வானம், இது, எல்லாம் உடையான் தன்னை;            வரி அரவக் கச்சானை; வன்பேய் சூழக்   கானம் அதில் நடம் ஆட வல்லான் தன்னை, கடைக்       கண்ணால் மங்கையையும் நோக்கா; என்மேல்   ஊனம் அது எல்லாம் ஒழித்தான் தன்னை;         உணர்வு ஆகி அடியேனது உள்ளே நின்ற   தேன் அமுதை;-தென்கூடல்-திரு ஆலவா அய்ச்       சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே. |