227 | பொன் மணி அம் பூங்கொன்றை மாலையானை, புண்ணியனை, வெண் நீறு பூசினானை, சில்மணிய மூ இலைய சூலத்தானை, தென் சிராப்பள்ளிச் சிவலோக(ன்)னை, மன் மணியை, வான் சுடலை ஊராப் பேணி வல் எருது ஒன்று ஏறும் மறை வல்லானை,- கல் மணிகள் வெண் திரை சூழ் அம் தண் நாகைக் காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே. |