241 | அயன் அவனும் மால் அவனும் அறியா வண்ணம், ஆர் அழல் ஆய் நீண்டு, உகந்த அண்ணல் கண்டாய்; துயர் இலங்கை வேந்தன் துளங்க, அன்று, சோதி விரலால் உற வைத்தான் கண்டாய்; பெயர் அ(அ)வற்குப் பேர் அருள்கள் செய்தான் கண்டாய்; பேரும், பெரும் படையோடும், ஈந்தான் கண்டாய்; மயர் உறு வல்வினை நோய் தீர்ப்பான் கண்டாய்-மறைக்காட்டு உறையும் மணாளன் தானே. |