523 | காது இசைந்த சங்கக் குழையினான் காண்; கனகமலை அனைய காட்சியான் காண்; மாது இசைந்த மா தவமும் சோதித்தான் காண்; வல் ஏன வெள் எயிற்று ஆபரணத்தான் காண்; ஆதியன் காண்; அண்டத்துக்கு அப்பாலான் காண்; ஐந்தலை மாநாகம் நாண் ஆக்கினான் காண்; வேதியன் காண்; வேதவிதி காட்டினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே. |