668 | எய்தானை, புரம் மூன்றும் இமைக்கும் போதில்; இரு விசும்பில் வருபுனலைத் திரு ஆர் சென்னிப் பெய்தானை; பிறப்பு இலியை; அறத்தில் நில்லாப் பிரமன் தன் சிரம் ஒன்றைக் கரம் ஒன்றி(ன்)னால் கொய்தானை; கூத்து ஆட வல்லான் தன்னை; குறி இலாக் கொடியேனை அடியேன் ஆகச் செய்தானை; திரு நாகேச்சுரத்து உளானை; சேராதார் நன்நெறிக்கண் சேராதாரே. |