687 | போர்த்து, ஆனையின் உரி-தோல் பொங்கப்பொங்க, புலி அதளே உடையாகத் திரிவான் தன்னை; காத்தானை, ஐம்புலனும்; புரங்கள் மூன்றும், காலனையும், குரைகழலால் காய்ந்தான் தன்னை; மாத்து ஆடிப் பத்தராய் வணங்கும் தொண்டர் வல்வினைவேர் அறும் வண்ணம் மருந்தும் ஆகித் தீர்த்தானை; திரு முதுகுன்று உடையான் தன்னை; தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!. |