106கல் ஊர் கடி மதில்கள் மூன்றும் எய்தார்;
             காரோணம் காதலார்; காதல்செய்து
நல்லூரார்; ஞானத்தார்; ஞானம் ஆனார்;
  நால்மறையோடு ஆறு அங்கம் நவின்ற நாவார்;
மல் ஊர் மணி மலையின்மேல் இருந்து, வாள்
        அரக்கர்கோன் தலையை மாளச் செற்று,
பல் ஊர் பலி திரிவார்; பைங்கண் ஏற்றார்; பலி
                 ஏற்றார்-பந்தணைநல்லூராரே.