236 | மூரி முழங்கு ஒலி நீர் ஆனான் கண்டாய்; முழுத்தழல் போல் மேனி முதல்வன் கண்டாய்; ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்; இன் அடியார்க்கு இன்பம் விளைப்பான் கண்டாய்; ஆரியன் கண்டாய்; தமிழன் கண்டாய்; அண்ணாமலை உறையும் அண்ணல் கண்டாய்; வாரி மத களிறே போல்வான் கண்டாய்-மறைக்காட்டு உறையும் மணாளன் தானே. |