669அளியானை, அண்ணிக்கும் ஆன்பால் தன்னை,
       வான் பயிரை, அப் பயிரின் வாட்டம் தீர்க்கும்
துளியானை, அயன் மாலும் தேடிக் காணாச்
         சுடரானை, துரிசு அறத் தொண்டுபட்டார்க்கு
எளியானை, யாவர்க்கும் அரியான் தன்னை,
       இன் கரும்பின் தன்னுள்ளால் இருந்த தேறல்,-
தெளியானை, திரு நாகேச்சுரத்து உளானை,
             சேராதார் நன் நெறிக் கண் சேராதாரே.