877வார் கெழுவு முலை உமையாள் வெருவ அன்று மலை
           எடுத்த வாள் அரக்கன் தோளும் தாளும்
ஏர் கெழுவு சிரம் பத்தும் இறுத்து, மீண்டே இன் இசை
           கேட்டு இருந்தானை; இமையோர் கோனை;
பார் கெழுவு புகழ் மறையோர் பயிலும் மாட, பைம்பொழில்
                   சேர்தரும், ஓமாம்புலியூர் மன்னும்
சீர் கெழுவு வடதளி எம் செல்வன் தன்னை; சேராதே
                      திகைத்து நாள் செலுத்தினேனே!.